இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது ஏப்ரல் 23, 2008 ஆல் A Yunus
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு,
ஆலந்தூரில் உள்ள மஸ்ஜிது அஹ்லே ஹதீஸில் ஷேக் இப்னு பாஜ் அவர்களின் புத்தகமான “அல் அகீதத்துல் ஸஹீஹா” வின் மேல் வகுப்புகள் நடை பெற இருக்கின்றது. முதலில் நாம் ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும். அல்லாஹ் நாடாமல் எவருக்கும் இந்த தீனைப் பற்றிய அறிவு கிட்டுவதில்லை. அல்லாஹ் நாடியவாறே ஒருவருக்கு இஸ்லாத்தின் அறிவு கிட்டுகின்றது. அந்த அறிஞரை நாம் மதிப்புடன் அணுக கற்றுக் கொள்ள வேண்டும். அவர் வஹ்ஹாபி, இவர் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது கட்டுரை | குறிச்சொல்லிடப்பட்டது: அல் அகீதத்துல் ஸஹீஹ, அஹ்லே ஹதீஸ், ஆலந்தூர் மஸ்ஜித், இல்ம், இஸ்லாமிய பாட வகுப்ப, விடுமுறை பாடங்கள் | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது ஏப்ரல் 4, 2008 ஆல் A Yunus
அஸ்ஸலாமு அலைக்கும்,
உலகில் எங்கெல்லாம் முஸ்லிம் மக்கள் வாழ்கின்றனரோ அங்கெல்லாம் குர்ஆனை ஓதித் தரும் மதரஸாக்களும், ஆலிம்களும் பலர் உள்ளனர். எனினும், சரியான உச்சரிப்பை வெகு சில இடங்களிலேயே காண முடிகின்றது. அதிலும் உருதுவை தாய்மொழியாக கொண்ட ஹஜ்ரத்தின் உச்சரிப்பு ஒருவிதமும், தமிழை தாய் மொழியாகக் கொண்ட ஹஜ்ரத்தின் உச்சரிப்பு வேறு விதமும், இன்னும் மலையாளம் பேசும் ஹஜ்ரத்துமாரின் உச்சரிப்பு மலையாள வாடையிலேயே இருப்பதும் உண்டு. இதனால், சரியான உச்சரிப்பு என்பது கனவாகவே அமைந்து விடுகின்றது.
எனக்கு தெரிந்த ஒரு [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது கட்டுரை, குர்'ஆன் பதிவுகள் | குறிச்சொல்லிடப்பட்டது: ஃகல் ஃகலா, இக்ஃபா, இத்காம், இஸ்லாம், ஓதுதல், கிராஅத், குன்னா, குரான், குர்ஆன், தஜ்வீத், மனனம், முஸ்லிம், التَّجْوِيْ | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது ஏப்ரல் 3, 2008 ஆல் A Yunus
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதர சகோதரிகளே,
நம்மில் நிறைய பேருக்கு, அல்லாஹ் நமக்கு தந்துள்ள அருட்கொடைகளைப் பற்றிய நினைவோ, அதற்கு நன்றி செலுத்த வேண்டும் என்ற எண்ணமோ இருப்பதில்லை. அதிகம் பேரிடம், இது நம்முடைய கடின உழைப்பால் கிட்டியது என்ற எண்ணமே மேலோங்கி உள்ளது. சற்றே ஒரு நொடி நினைத்துப் பாருங்கள். அல்லாஹ் நினைத்தால் இந்த அருட்கொடைகளை ஒரு நொடியில் நம்மிடமிருந்து அகற்றிட முடியும். அந்நிலை ஏற்பட்டால்?
கீழே பதியப்பட்டிருக்கும் படம் இது போல வாழ்ந்த ஒரு மனிதருடையது. தற்போது [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது இஸ்லாமிய ஆக்கப்படங், கட்டுரை | குறிச்சொல்லிடப்பட்டது: அருட்கொடை, இஸ்லாம், ஓதுதல், காலம் தாழ்த்துதல், குர்ஆன், சஜ்தா, தாய், தொழுகை, பக்கவாதம், பாரிசவாதம், முஸ்லிம், யூ டுயூப், யூ ட்யூப், விருப்பம், ஸஜ்தா | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது மார்ச் 27, 2008 ஆல் A Yunus
புகழ் மாலைகளிலும், பாராட்டுகளிலுமே மூழ்கிக் கிடக்கும் தற்போதைய உலகத்தில், புகழுக்கு மயங்காத, அதன் வசீகரத்தால் கவரப்படாத, தன் அடிப்படைக் கோட்பாடுகளை உறுதிபட கையாளும் ஒரு இளைஞனைக் காணும்பொழுது மனதிற்கு இதமளிக்கின்றது. நாம் பேசுவது, ஹாஷிம் ஆம்லாவைப் பற்றி, கடந்த வருடம் அனைத்து செய்தித்தாள்களிலும் (அவருடைய நாட்டின் கிரிக்கெட் குழுவிற்கு (PROTEAS) தேர்ந்தெடுக்கப் பட்டபோது) அதிகமாக காணப்பட்ட ஒரு பெயர்.
ஒரு செய்தித்தாள் விடாமல் அத்தனை செய்தித்தாள்களிலும் தன் பெயர், முதல் பகுதியில் பகட்டாக வெளிப்பட்டபொழுதும் தன்னடக்கத்தில் அதன் தழும்பைக் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது கட்டுரை | குறிச்சொல்லிடப்பட்டது: கிரிக்கெட், தென்னாப்பிரிக்கா, ஹாஷிம் ஆம்லா, cricket, Hashim Amla, Nashua Dolphins, PROTEAS, South african cricketer | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது மார்ச் 24, 2008 ஆல் A Yunus
சுவனத்தைப் பற்றியும், அதன் மட்டற்ற மகிழ்ச்சிகளைப் பற்றியும்…(1)
சுவனத்தைப் பற்றியும், அதன் மட்டற்ற மகிழ்ச்சிகளைப் பற்றியும்…(2)
“இன்னும் நற்கூலிகள் பெருகிடும் நாளையும், அந்நாளில் காட்சி தரும் எல்லாம் வல்ல, முற்காலமும் அறிந்தவனின் ஈடு இணையற்ற, ஒப்பிட இயலா, அழகிய முகத்தை (நடுப்பகலில் காணக் கிடைக்கும் சூரியனையும், மேகங்களற்ற இரவினில் வலம் வரும் நிலவைப் பார்ப்பது போலான) காணும் சௌந்தர்யத்தையும் பற்றி கேள்வியுண்டென்றால், கேளுங்கள்,“
அந்நாளில் அழைப்பாளர் அழைப்பார், “ஓ! சுவனவாதிகளே, சாந்தி நிரம்பிய, அளவற்ற கண்ணியத்துக்கு உரியவன் தங்களை காண அழைக்கின்றான், [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது கட்டுரை, சுவனம் | குறிச்சொல்லிடப்பட்டது: அல்லாஹ், இஸ்லாம், ஈமான், குர்ஆன், சுவனத்தின் அழகு, சுவனம், சுவர்க்கம், சொர்க்கம், நதிகள், நம்பிக்கை கொண்டோர், முஸ்லிம் | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது மார்ச் 16, 2008 ஆல் A Yunus
சுவனத்தைப் பற்றியும், அதன் மட்டற்ற மகிழ்ச்சிகளைப் பற்றியும்…(1)
சுவனத்தைப் பற்றியும், அதன் மட்டற்ற மகிழ்ச்சிகளைப் பற்றியும்…(3)
“இன்னும் அது எவ்வளவு தூரம் வானத்தில் நீண்டு கொண்டிருக்கிறது என்று கேட்டீர்களானால், நம் கண்களுக்கு எட்டுகின்ற தூரத்தில் உள்ள நட்சத்திரங்களைப் பாருங்கள், இன்னும் நம் கண்களுக்கு புலப்படா தூரத்தில் உள்ளவைகளையும் கருத்தில் கொள்ளுங்கள்””இன்னும் சுவனத்தில் வாழ்பவர்களின் உடைகளைப் பற்றி கேட்டீர்களானால், அவை தங்கத்தாலும், பட்டாலும் நெய்யப்பட்டவையாகும்”
“இன்னும் அதன் படுக்கைகளைப் பற்றி கேட்டீர்களானால், அவை உயர்தர பட்டினைக் கொண்டு மிகச் சிறந்த முறையில் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது கட்டுரை, சுவனம் | குறிச்சொல்லிடப்பட்டது: அல்லாஹ், இஸ்லாம், ஈமான், குர்ஆன், சுவனத்தின் அழகு, சுவனம், சுவர்க்கம், சொர்க்கம், நதிகள், நம்பிக்கை கொண்டோர், முஸ்லிம் | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது மார்ச் 14, 2008 ஆல் A Yunus
சுவனத்தைப் பற்றியும், அதன் மட்டற்ற மகிழ்ச்சிகளைப் பற்றியும்…(2)
சுவனத்தைப் பற்றியும் அதன் மட்டற்ற மகிழ்ச்சிகளைப் பற்றியும்…(3)
“இன்னும் அதன் தரையைப் பற்றியும் மண்ணைப் பற்றியும் கேட்டீர்களானால், அவை கஸ்தூரியும் குங்குமப்பூவுமாகும்”
“இன்னும் அதன் கூரையைப் பற்றி் கேட்டீர்களானால், அது அளவற்ற அருளாளனின் அரியாசனமாகும்”
“இன்னும் அதன் பாறைகளைப் பற்றி் கேட்டீர்களானால், அவை பவள ஆபரணங்களாகும்”
“இன்னும் அதன் கட்டிடங்களைப் பற்றி் கேட்டீர்களானால், அவை தங்கக் கட்டிகளாலும் வெள்ளிக் கட்டிகளாலும் கட்டப்பட்டவையாகும்”
“இன்னும் அதன் மரங்களைப் பற்றி் கேட்டீர்களானால், தங்கமோ அல்லது வெள்ளியோ அல்லாத எந்த [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது கட்டுரை, சுவனம் | குறிச்சொல்லிடப்பட்டது: அல்லாஹ், இஸ்லாம், ஈமான், குர்ஆன், சுவனத்தின் அழகு, சுவனம், சுவர்க்கம், சொர்க்கம், நதிகள், நம்பிக்கை கொண்டோர், முஸ்லிம் | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது நவம்பர் 8, 2007 ஆல் A Yunus
சென்ற வாரம் சனி-ஞாயிறுகளில் ‘ரட்கர்ஸ்’ பல்கலைக் கழகத்தினுள் ‘அல்-மக்ரிப்’ நிறுவனத்தால் நடத்தப்பட்ட ‘உலூமுல் குர்-ஆன்’ வகுப்புகளில் மீண்டும் மாணவியாகி பயணம் செய்தேன். இரு வார காலத்தில், வார இறுதியில் மட்டும் வகுப்புகள் நடக்கும். ஒரு மாத அவகாசத்தில் தேர்வு எழுத வேண்டும். ஆலிம் பட்டமோ அல்லது உலெமா பட்டமோ கிட்டுவதில்லை. எனினும் ஆலிம்களும், உலெமாக்களும் கற்கும் அளவிற்கான பாடத்திட்டம் அது. அல்ஹம்துலில்லாஹ். ஆசிரியர்கள் யாவரும் ‘மதினா‘ பல்கலைக் கழகத்தின் தவப் புதல்வர்கள் என்பது இன்னும் சிறப்பு.
ஞாயிறு [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது கட்டுரை | குறிச்சொல்லிடப்பட்டது: article, அல்லாஹ், அழுகை, ஏன் இந்த அழுகை?, கண்ணீர், பயணம், think about | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது நவம்பர் 8, 2007 ஆல் A Yunus
அது ஒரு விடிகாலை வேளை. போர்வையை தேடிப் பிடித்து மீண்டும் உறங்க முற்படுகிறேன், முன்னறையின் விளக்கு வெளிச்சம் கண்களில் தெறிக்கிறது. கண் திறக்காமலே புரிகின்றது; என் கணவர் தஹஜ்ஜுத் தொழுவதற்காக ஆயத்தமாகிறார்! மீண்டும் கனவுலகில் நுழைய எத்தனிக்கிறேன், மனதின் போக்கை மாற்ற முயல்கிறேன்; ஆன்மா தடை செய்கின்றது. இவருக்கு மட்டும் தூக்கமே வராதோ? ஏழு மணி நேரம் தூங்கியும் பஜருக்கு முன் இன்னும் சிறிது தூங்க முடியாதா என என்னும் நான் எங்கே, அலுவலக பணியில் நாள் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது கட்டுரை | குறிச்சொல்லிடப்பட்டது: article, அல்-லைல், இபாதத், குர்-ஆன், தப்சீர், think about | மறுமொழி இல்லை »