என்னைப் பற்றி…

அறிந்திட முயலும் இதயம்…

அறிந்ததை பரப்பிட துடிக்கும் ஆன்மா….

வல்ல ரஹ்மானின் திருப்தி பெறும் பொருட்டு வாழ்ந்திட விழையும் பயணம்…

அஸ்ஸலாமு அலைக்கும்,தமிழ்நாட்டில், கோவையில் பிறந்து, திருமணத்திற்கு பிறகு அமெரிக்காவில் நியூ ஜெர்ஸியில் வாழ்ந்து கொண்டிருக்கும், ஒரு முஸ்லிம். மகளாக, சகோதரியாக, மனைவியாக, மருமகளாக, (இன்ஷா அல்லாஹ் தாயாகவும்) வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மு’மின்.

ஆங்கிலத்தில் அதிக அளவில் புத்தகங்களும், இணைய தளங்களும் இருந்தாலும், தமிழில் சில நூல்களும், மிகச் சில இணைய தளங்களுமே இஸ்லாட்திற்காய் உள்ளன. இந்த வலைப்பூ, இஸ்லாத்திற்காக, ஆங்கிலத்தில் உள்ள அழகிய மற்றும் ஆதாரபூர்வமான, உபயோகமான தகவல்களை முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கு தெரிவிக்கவே. படித்தது பிடித்திருந்தால் துஆ செய்யவும். இல்லையெனில் குறிப்பிட்டு தெரிவிக்கவும் இன்ஷா அல்லாஹ். மாற்றம் தேவையெனில் உடனே செயல்படுத்தப்படும் இன்ஷா அல்லாஹ்.



Leave a Reply

You must be logged in to post a comment.