40 குர்ஆன் துஆக்கள்
“எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்” (2:197)
رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ العَلِيمُ
ரப்பனா தஃகப்பல் மின்னா இன்னக அன்த ஸமீயுல் அ’லீம்
“எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக, எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை)ஆக்கி வைப்பாயாக, நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக, எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக, நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.” (2:12
رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْراً وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى القَوْمِ الكَافِرِينَ
ரப்பனா அஃப்ரிக் ‘அலய்னா சப்ரன் வ த்சப்பித் அக்தாமனா வன் சுர்நா அலல் ஃகவ்மில் காஃபிரீன்
“எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக!”
رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا
ரப்பனா லா துவா ஃகிஜ்நா இன் நசீனா அவ் அஃக்தானா
“எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக!”
رَبَّنَا وَلاَ تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا
ரப்பனா வலா தஹ்மில் ‘அலய்னா இஸ்ரன் கமா ஹமல்தனா அல்த் தீன மின் ஃகப்லினா
رَبَّنَا لاَ تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ
ரப்பனா லா துஜிக் ஃகுலூபுனா ப’த இஜ் ஹதய்தனா வ ஹப்லனா மின் லதுன்க ரஹ்மத்தன் இன்னக அன்தல் வஹ்ஹாப்
“எங்கள் இறைவா! நிச்சயமாக நீ மனிதர்களையெல்லாம் எந்த சந்தேகமுமில்லாத ஒரு நாளில் ஒன்று சேர்ப்பவனாக இருக்கின்றாய். நிச்சயமாக அல்லாஹ் வாக்குறுதி மீற மாட்டான்” (3:9)
رَبَّنَا إِنَّكَ جَامِعُ النَّاسِ لِيَوْمٍ لاَّ رَيْبَ فِيهِ إِنَّ اللّهَ لاَ يُخْلِفُ الْمِيعَادَ
ரப்பனா இன்னக ஜாமி’உன் நாஸி லி யவ்மின் லா ரய்ப ஃபீஹீ இன்னல்லாஹ லா யுஃக்லிஃபுல் மீ ‘ஆத்
رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ
ரப்பனா இன்னனா ஆமன்னா ஃபாக் ஃபிர்லனா ஜுனூபனா வ கீனா அஜா பன் நார்
கவனிக்க:
தமிழில் கொடுத்துள்ள உச்சரிப்பு சரியான உச்சரிப்பு கிடையாது. எனவே தஜ்வீதை சரியான முறையில் கற்று உச்சரிக்கவும்.