அற்புத குர்ஆனும் அழகிய தஜ்வீதும் –1
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது ஏப்ரல் 4, 2008 ஆல் A Yunus
அஸ்ஸலாமு அலைக்கும்,
உலகில் எங்கெல்லாம் முஸ்லிம் மக்கள் வாழ்கின்றனரோ அங்கெல்லாம் குர்ஆனை ஓதித் தரும் மதரஸாக்களும், ஆலிம்களும் பலர் உள்ளனர். எனினும், சரியான உச்சரிப்பை வெகு சில இடங்களிலேயே காண முடிகின்றது. அதிலும் உருதுவை தாய்மொழியாக கொண்ட ஹஜ்ரத்தின் உச்சரிப்பு ஒருவிதமும், தமிழை தாய் மொழியாகக் கொண்ட ஹஜ்ரத்தின் உச்சரிப்பு வேறு விதமும், இன்னும் மலையாளம் பேசும் ஹஜ்ரத்துமாரின் உச்சரிப்பு மலையாள வாடையிலேயே இருப்பதும் உண்டு. இதனால், சரியான உச்சரிப்பு என்பது கனவாகவே அமைந்து விடுகின்றது.
எனக்கு தெரிந்த ஒரு அண்ணன் சமீபத்தில் கனெக்டிகட் மாகாணத்தில் வேலைக்காக வந்து சேர்ந்தார். சில நாட்களிலேயே அவரின் குடும்பத்தையும் அமெரிக்காவிற்கு அழைத்துக் கொண்டார். அக் குடும்பத்தில் உள்ள கடைசி பெண்குழந்தைக்கு அங்கும் இங்கும் தேடி ஒரு பாகிஸ்தானிய பெண்ணிடம் குர்ஆன் ஒதுவதிற்காக சேர்த்தனர். அக் குழந்தை வீட்டிற்கு வந்த பின் ஓதும் முறையைக் கண்டு அண்ணிக்கு சந்தேகமே வந்து விட்டது, நாம் சரியான இடத்தில்தான் குழந்தையை சேர்த்தோமா என்று. ஏனெனில் இவர்கள் ஓதி வளர்ந்த ஒரு தமிழ் ஹஜ்ரத்திடம். இக் குழந்தைக்கு கற்றுக் கொடுக்கும் சகோதரியோ சரியான அரபி உச்சரிப்பை கற்றுக் கொடுத்துக் கொண்டுள்ளார். அண்ணி என்னிடம் தொலைபேசியில் உரையாடியபோது, இதைப் பற்றி கூறினார்கள். அதன் பின் நான் அவர்களையும் அந்த சகோதரியிடமே சரியான உச்சரிப்பை கற்றுக் கொள்ளுமாறு கூறினேன். இப்பொழுது தாயும் சேயும் சேர்ந்தே கற்றுக் கொள்கின்றனர்.
அல்ஹம்துலில்லாஹ். ஆனால், எல்லோருக்கும் இது போன்ற சந்தர்ப்பம் கிட்டுவதில்லை. தத்தம் வீடுகளிலேயே அமர்ந்து கொண்டு, வீட்டிற்கு வந்து குர்ஆனை ஓதக் கற்றுக் கொடுக்கும் ஹஜ்ரத்துமாரே சாலச் சிறந்தவர் என வாழ்ந்து விடுகின்றோம். நபி (ஸல்) அவர்களின் கூற்றுப் படி, குர் ஆனின் ஒவ்வொரு எழுத்துக்கும் பத்து நன்மைகள் உண்டு. ஆனால் அவற்றை சரியாக ஓத யாரும் முயற்சிப்பதில்லை.
இன்ஷா அல்லாஹ், இந்த பகுதியில், இனி முதல் சரியான முறையில் குர் ஆன் ஓதிட பாடங்களை காண்போம். வல்ல ரஹ்மான் துணையிருப்பானாயின், இவ் வேலை எளிதானதாகவும், பயனுள்ளதாகவும் அமையும். அதற்கு அல்லாஹ் துணையிருப்பானாக. ஆமீன்.
இதற்கான பாடங்கள் கீழ்க்காணும் வலைகளிலிருந்தும், மற்றும் நான் கற்றுக் கொள்ளும் வகுப்புகளின் பாட புத்தகங்களிலிருந்தும் தொகுக்கப் படும்.
-
இஸ்லாம் கல்வி
-
மதீனா அராபிக்
-
அஸ்-ஸித்க், கனடா
-
தஜ்வீதின் விதிகள்
-
மதீனா பல்கலைக் கழக பாடங்கள்
-
குர்ஆனை அழகிய முறையில் வாசிக்க
-
இல்ம் ஃப்ரூட்ஸ்
-
ஆங்கிலத்தில் தஜ்வீத்
இந்த பகுதியில், இனி வரும் பாடங்களில் ஏதேனும் தவறு இருந்தாலோ, அல்லது, ஐயம் எழுந்தாலோ தயவு செய்து கீழே கருத்துக்களின் மூலம் தெரிவியுங்கள் / அல்லது எனக்கு இம்முகவரியில் மின்னஞ்சல் எழுதுங்கள்.
இன்ஷா அல்லாஹ், அடுத்த பகுதியில் சந்திப்போம்…
பகுதி இரண்டு
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது கட்டுரை, குர்'ஆன் பதிவுகள் | குறிச்சொல்லிடப்பட்டது: ஃகல் ஃகலா, இக்ஃபா, இத்காம், இஸ்லாம், ஓதுதல், கிராஅத், குன்னா, குரான், குர்ஆன், தஜ்வீத், மனனம், முஸ்லிம், التَّجْوِيْ