ஆலந்தூரில் “அல் அகீதத்துல் ஸஹீஹா” பாட வகுப்புகள்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு,
ஆலந்தூரில் உள்ள மஸ்ஜிது அஹ்லே ஹதீஸில் ஷேக் இப்னு பாஜ் அவர்களின் புத்தகமான “அல் அகீதத்துல் ஸஹீஹா” வின் மேல் வகுப்புகள் நடை பெற இருக்கின்றது. முதலில் நாம் ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும். அல்லாஹ் நாடாமல் எவருக்கும் இந்த தீனைப் பற்றிய அறிவு கிட்டுவதில்லை. அல்லாஹ் நாடியவாறே ஒருவருக்கு இஸ்லாத்தின் அறிவு கிட்டுகின்றது. அந்த அறிஞரை நாம் மதிப்புடன் அணுக கற்றுக் கொள்ள வேண்டும். அவர் வஹ்ஹாபி, இவர் [...]

“அப்பா, ஆமீன் என்று கூறுங்கள்”

ரியாதில் உள்ள ஒரு உலெமா தெரிவித்தது:
ஒரு தடவை ரியாதில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டுக் கொண்டிருநதோம். அப்பொழுது, ஒரு அறையில், ஒரு வயதான மனிதரும் அவரின் 40 வயது மகளும் இருந்தனர். அவரின் மகளுக்கும் திருமணம் ஆகியிருக்கவில்லை. அவளுக்கென வந்த ஒவ்வொரு வரனையும் அவ்ளின் தந்தை தட்டிக் கழித்துக் கொண்டிருந்தார். அந்த உலெமா கூறினார், ” அந்த மனிதர் மிகப் பேராசை கொண்டவராக இருந்தார். உலகத்திம் மீது தீராத மோகம் கொண்டவராக இருந்த்தார். ஆனால் அவரின் [...]

அற்புத குர்ஆனும் அழகிய தஜ்வீதும் –2

பகுதி ஒன்று
அஸ்ஸலாமு அலைக்கும்,
இந்த் பகுதியில் அரபி எழுத்துக்களின் உச்சரிப்பை பழகுவோம். உச்சரிப்பு என்றதும் இது நமக்கு தெரிந்தது தானே என்று இருந்து விடாதீர்கள். அரபியில் உள்ள எழுத்துக்களுக்கும் நம் தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்களுக்கும் தொலைதூர தொடர்பே உள்ளது. நாம் நினைத்துக் கொண்டு உள்ளது போல ஒரே மாதிரி உச்சரிக்கப் படுவதில்லை அவை. இன்னும் ஒன்றை நினைவிற் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனி அடையாளங்கள் உண்டு. எனவே அரபியை அதன் வழியிலேயேதான் கற்க வேண்டும். தமிழ் [...]

இறுதி மூச்சு

அஸ்ஸலாமு அலைக்கும்,
அல்லாஹ் படைத்த அனைத்துமே ஒரு நாள் மடியும், முடியும். மனிதன் மட்டும் விலக்கல்ல. ஆனால் மனிதனின் மரணம் முடிவல்ல, தொடர்கதையின் அடுத்த பகுதிக்கான நுழைவாயில் அது. மரணத்திற்கு முன் வாழ்ந்த வாழ்வை பரீசீலித்து கூலிகள் வழங்கப் படுவதே அடுத்த பகுதி. நாம் எல்லோரும் அதை உணர்ந்துள்ளோமா, அதற்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டுள்ளோமா என்பதே கேள்வி. இங்கு கீழே பதியப்பட்டிருக்கும் பாடலும் அதைப் பற்றியே…

அற்புத குர்ஆனும் அழகிய தஜ்வீதும் –1

அஸ்ஸலாமு அலைக்கும்,
உலகில் எங்கெல்லாம் முஸ்லிம் மக்கள் வாழ்கின்றனரோ அங்கெல்லாம் குர்ஆனை ஓதித் தரும் மதரஸாக்களும், ஆலிம்களும் பலர் உள்ளனர். எனினும், சரியான உச்சரிப்பை வெகு சில இடங்களிலேயே காண முடிகின்றது. அதிலும் உருதுவை தாய்மொழியாக கொண்ட ஹஜ்ரத்தின் உச்சரிப்பு ஒருவிதமும், தமிழை தாய் மொழியாகக் கொண்ட ஹஜ்ரத்தின் உச்சரிப்பு வேறு விதமும், இன்னும் மலையாளம் பேசும் ஹஜ்ரத்துமாரின் உச்சரிப்பு மலையாள வாடையிலேயே இருப்பதும் உண்டு. இதனால், சரியான உச்சரிப்பு என்பது கனவாகவே அமைந்து விடுகின்றது.
எனக்கு தெரிந்த ஒரு [...]

காலம் தாழ்த்தாதீர்கள் சகோதர சகோதரிகளே…

அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதர சகோதரிகளே,
நம்மில் நிறைய பேருக்கு, அல்லாஹ் நமக்கு தந்துள்ள அருட்கொடைகளைப் பற்றிய நினைவோ, அதற்கு நன்றி செலுத்த வேண்டும் என்ற எண்ணமோ இருப்பதில்லை. அதிகம் பேரிடம், இது நம்முடைய கடின உழைப்பால் கிட்டியது என்ற எண்ணமே மேலோங்கி உள்ளது. சற்றே ஒரு நொடி நினைத்துப் பாருங்கள். அல்லாஹ் நினைத்தால் இந்த அருட்கொடைகளை ஒரு நொடியில் நம்மிடமிருந்து அகற்றிட முடியும். அந்நிலை ஏற்பட்டால்?
கீழே பதியப்பட்டிருக்கும் படம் இது போல வாழ்ந்த ஒரு மனிதருடையது. தற்போது [...]