நம்பிக்கையாளனின் மேன்மை
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது மார்ச் 22, 2008 ஆல் A Yunus
ஸஹல் பின் ஸா’த், ஜாபிர் பின் அப்தில்லாஹ், மற்றும் அலீ பின் அபி தாலிப் (ரதியல்லாஹுஅன்ஹும்) அறிவிக்கிறார்கள் : நபி முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள் , ” ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) என்னிடத்தில் வந்து,
‘ முஹம்மதே, நீங்கள் விரும்புகின்ற வரை வாழ்ந்து கொள்ளுங்கள், ஏனெனில், கண்டிப்பாக நீங்கள் மரணிப்பீர்கள்;
யாரை வேண்டுமானாலும் நேசியுங்கள், ஏனெனில், கண்டிப்பாக அவரை நீங்கள் பிரிவீர்கள்;
எந்த காரியமாகிலும் செய்யுங்கள், ஆனால் கண்டிப்பாக அதற்குண்டான தீர்ப்பை சந்திப்பீர்கள்;
மேலும் தெரிந்து கொள்ளுங்கள் ஒரு நம்பிக்கையாளனின் மேன்மை, அவனின் இரவு வணக்கத்தில் / ஃகியாமில் உள்ளது, மற்றும் அவனது கண்ணியம், அவன் பொருளுதவிக்காக மற்றவர்களை எதிர்பாராமல் வாழ்வதில் உள்ளது’
என்று கூறினார்”.
[ அத் தபரானி அவர்கள் 'அல் அஸ்வத்'தில் பதிவு செய்துள்ளார். பைஹகீயின் நூலிலும், இன்னும் பலரின் நூலிலும் உள்ளது. அல்பானீ அவர்கள் தன்னுடைய 'அஸ் ஸஹீஹாஹ்' நூலில் (பக்கம்-831) 'ஹஸன்' தரமுள்ளது என பதிவு செய்துள்ளனர்]
இந்த ஹதீத்தை இங்கிருந்து தமிழில் பதிவு செய்துள்ளேன். தமிழாக்கத்தில் எந்த தவறு இருந்தாலும், சுட்டிக் காட்டவும். நன்றி.
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது படித்ததில் பிடித்தத | குறிச்சொல்லிடப்பட்டது: அலீ, இபாதத், இரவு, இரவு வணக்கம், இஸ்லாம், ஈமான், கடன், கண்ணியம், ஜிப்ரீல், தொழுகை, நம்பிக்கை, நம்பிக்கையாளன், பொருளுதவி, முஸ்லிம், முஹம்மது, மேன்மை, வணக்கம், ஹதீத்